மொண்ணைகளின் தேசத்தில் ஒரு மொண்ணையாய்........
- 2016 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து ரோமில் ரோமானியனாய் இரு தமிழ்நாட்டில் மொண்ணைக் கழுதையாய் இரு..இதுவே தேர்தல் முடிவுகள் அறிவுறுத்தும் நற்செய்தி. கழுதை கூட அடி மடியில் கை வைத்தால் எட்டி உடைக்கும். எத்தனை அடிப்பட்டாலும் திருந்துவதற்கான அறிகுறியே இல்லாமல் மாற்றத்திற்க்கானப் பாதைகளை அறியாமல் துர்நாற்றம் வீசும் சாக்கடைகளிலேயேப் புரண்டுக் கொண்டிருக்கும் சுரணையற்ற சமூகமாய் மாறிவிட்டது பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம். இது அறத்தின் வீழ்ச்சி. எளிமை , நேர்மை , அர்ப்பணிப்பு போன்ற குணங்கள் சினிமாக்களில் மற்றும் ரசிக்கப்படும். நிதர்சன வாழ்வில் நாம் போற்றும் விழுமியங்கள் வெறும் பணம் மட்டுமே. மாற்றமாவது மண்ணாங்கட்டியாவது. மாற்றம் விரும்பிய நல்லுள்ளங்களே மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். என்ன ஆறுதல் சொன்னாலும் மனதில் பூதாகரமாய் ஒரு கேள்வி எழுகிறது அப்படி என்ன வரலாறு காணாத முன்னேற்றத்தைக் கண்டுவிட்டோம் இந்த ஐந்து ஆண்டுகளில் ? எந்த அடிப்படையில் இந்த ஓட்டுக்கள் விழுந்தன ? அம்மைச்சரவை மாற்றங்களையும் ...