மொண்ணைகளின் தேசத்தில் ஒரு மொண்ணையாய்........

-2016 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து 

ரோமில் ரோமானியனாய் இரு தமிழ்நாட்டில் மொண்ணைக் கழுதையாய்  இரு..இதுவே தேர்தல் முடிவுகள் அறிவுறுத்தும் நற்செய்தி. கழுதை கூட அடி மடியில் கை வைத்தால் எட்டி உடைக்கும். எத்தனை அடிப்பட்டாலும் திருந்துவதற்கான அறிகுறியே இல்லாமல் மாற்றத்திற்க்கானப்  பாதைகளை அறியாமல் துர்நாற்றம் வீசும் சாக்கடைகளிலேயேப் புரண்டுக் கொண்டிருக்கும் சுரணையற்ற சமூகமாய் மாறிவிட்டது பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம். இது அறத்தின் வீழ்ச்சி. எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு போன்ற குணங்கள் சினிமாக்களில் மற்றும் ரசிக்கப்படும். நிதர்சன வாழ்வில்   நாம் போற்றும் விழுமியங்கள் வெறும் பணம் மட்டுமே. மாற்றமாவது மண்ணாங்கட்டியாவது. மாற்றம் விரும்பிய நல்லுள்ளங்களே மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். என்ன ஆறுதல் சொன்னாலும் மனதில் பூதாகரமாய் ஒரு கேள்வி எழுகிறது அப்படி என்ன வரலாறு காணாத முன்னேற்றத்தைக் கண்டுவிட்டோம் இந்த ஐந்து ஆண்டுகளில்? எந்த அடிப்படையில் இந்த ஓட்டுக்கள் விழுந்தன?

அம்மைச்சரவை மாற்றங்களையும் ஊழல்களையும் அறிவார்களா?ஆளும் கட்சியின் அராஜகமும் அகங்காரமும் நிரம்பியப் போக்கை ஆதரிக்கிறார்களா? உடுமலையில் கோகுல்ராஜ் வீதியில் வெட்டி சாய்க்கப்பட்ட சாதி ஆணவக் கொலைக் குறித்து ஜெயலலிதாவின் கருத்து என்ன என்று அறிவார்களா? விழுப்புரம் கல்லூரியில் மாணவிகளின் மர்ம தற்கொலைப் பற்றி ஜெயலலிதா என்ன செய்தார்? எல்லாவற்றையும் விட்டாலும் வெள்ளப் பேரழிவின் போதும் கூட நல்லவர்கள் அளித்த நிவாரணப் பொருட்க்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிய சில்லறைகளைக் கண்டித்தாரா? இவர்களே பெருவெள்ளத்தின் போது குழந்தைக்குப் பால் கிடைக்காதபோது மதுவுக்கு வழிவகை செய்த நல்ல மனசுக்காரர்கள்.இன்னும் சொல்லிக்கொண்டேப் போகலாம்.

சிந்திக்கும் திறனையே தமிழ் 'குடிமக்கள்' இழந்து நிற்க்கிறார்களா?வெறும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் தாள்கள் கண்களை மறைத்து விடுமா? இப்படி வாக்களித்தவர்கள் மனசாட்சியைக் கொலை செய்துவிட்டு வாக்களிதிருக்கிறார்கள் அல்லது அறியாமையால் வாக்களித்திருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளாவைபப் பார்த்தால் புரியும். தேர்தல் தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று தெரியும். அரசியல் அறிவு, நுண்ணர்வு இதைப் பற்றியெல்லாம் மனம் பிறழ்ந்த தேசத்தில் பேசி என்ன செய்ய!

வெயில் மண்டையைப் பிளக்க தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாத ஆற்றாமை என் நெஞ்சத்தை அடைக்க நிலையிழக்கிறேன் புது விடியலுக்கான ஏக்கத்தில்....



பி. கு : ஜெயலலிதாவும் அவளது சில்லறை சில்லுண்டிகளும் ஆறுதல் கொள்ள தேவையில்லை...ம.ந.கூ ஓட்டுக்களைப் பிரித்ததால் இந்த சாபக்கேடு வாய்க்கவில்லை. படை திரண்டு என் தமிழ் மக்கள் 80 சதவிகிதம் வாக்குகளை தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க கட்சிகளுக்கு வாரி வழங்கியிருக்கின்றனர்...வாழ்க ஜனநாயகம்.









Comments

Popular posts from this blog

The Last Word

Language of the Night

The Story of Life in a Room